கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேப்பம்பூ குறிப்புகள்

Tuesday, December 29, 2015

Road Song சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கதையொன்றைப் பின் தொடர்ந்து செல்கின்ற குறும்படம், Road Song . திருவண்ணாமலைக் கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த ஒருவர் பழனிக்கு முருகனை வழிபடச் செல்கின்றார். அங்கே சாப்பிடும் பப்பாசியின் உருசியில் மயங்கி, அந்த பப்பாசி மரத்தின் வகையைத் தேடி பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றார். இறுதியில் கேரளாவில் கடற்கரையோரத்தில்...

அலையும் நினைவுகள்

Saturday, December 19, 2015

நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபெத்தும் ரிச்சர்ட்டும்...

வீடு by Warsan Shire

Sunday, December 13, 2015

-தமிழாக்கம்: டிசே தமிழன் வீடு சுறாவின் வாயாக ஆகாதவரை வீட்டைவிட்டு எவரும் வெளியேறுவதில்லை முழுநகரும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணும்போதே நீங்கள் நாட்டெல்லையை நோக்கி ஓடுவீர்கள் உனது அயலவர்கள் உங்களை விட வேகமாக ஓடுகின்றனர் அவர்களின் மூச்சில் இரத்தவெடில் அடிக்கிறது. பழைய ரின் தொழிற்சாலையின் பின் கிறக்கமாய் முத்தமிட்ட உங்களோடு பள்ளிக்கு வந்த பையன் இப்போது தன்னைவிட உயரமான துவக்கை காவிக்கொண்டிருக்கின்றான்; வீடு உங்களைத் தங்க அனுமதிக்காத போதே நீங்கள்...

On the Road

Sunday, November 22, 2015

சாலி என்கின்ற ஓர் இளம் எழுத்தாளனின் எல்லையற்ற பயணமே இத்திரைப்படம். எழுதுவதற்கான அனுபவங்ளுக்காய் 'ஒழுக்கம்' எனச்சொல்லப்படும் எல்லாவற்றையும் மீறி, தெருக்களில் பயணிக்கின்ற குறிப்புகளின் வழியே காட்சிகள் படிமங்களாகின்றன. ஒரு எதிர்பாராத சந்திப்பில் சாலி, டீனைச் சந்திக்க கூடவே அவர் ஒரு பயணத் தோழமை ஆகின்றார். சாலி, தான் தெருக்களில் கடந்துபோகும் அனைத்து அனுபவங்களையும்...

பயணக்குறிப்புகள்- 10 (India)

Thursday, November 19, 2015

-முரண்களுக்குள் விரியும் அழகிய தருணங்கள் நானும் ஹசீனும் குடநாட்டு உணவகமொன்றில் பொளிச்சமீனையும் புட்டையும் உருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார், ஷோபா சக்தியோடு நிற்கின்றோம் வருகின்றீர்களாவென்று. ஷோபாவும், ஹசீனோடும் என்னோடும் பேசினார். அடுத்தநாள் காலையே இராமேஸ்வரம் பக்கமாய் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் படப்படிப்பிற்குப் போகவேண்டியிருக்கிறது என்றார். சிலநாட்களில் ஹசீன் இலங்கையிற்கும்,...

அலைந்து திரிந்தவனின் கதை

Friday, November 13, 2015

-டிசே தமிழன் அலெக்ஸ், மகிழ்ச்சியென்பது மனித உறவுகளால் மட்டும் ஏற்படுவதில்லையெனச் சொல்லியபடி, ஆபத்துக்கள் பற்றி  எதுவும் அஞ்சாது இயற்கையின் அடியாழத்தை நோக்கி  தேடிச் சென்றவன் நீ. இனி தப்புவதற்கு எந்த வழியுமில்லையென மரணத்தை துளித்துளியாக வரவேற்றபோதும் உன்னருகில் இருந்த தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாது, உனக்கு மிக விருப்பமான இயற்கையைப்...

கனடாத் தேர்தல் - 2015

Sunday, October 18, 2015

வருகின்ற திங்கட்கிழமை (Oct 19) கனடாவிற்கான தேர்தல் நடக்க இருக்கின்றது.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது  என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) முன்னணியில் நின்று, இடையில் வலதுசாரிகளான பழமைவாதக்கட்சியினர் ஓட்டத்தில் முன்னே போக, இப்போது லிபரல் கட்சியினர் முன்னணியில் நிற்பதாய் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புக்கள் நடத்தும் நிறுவனங்கள், அவர்கள்...

இலுப்பைப்பூ குறிப்புகள்

Wednesday, October 14, 2015

Tracks & Wild Into the Wild நூலாகவும், பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டபின் வந்த ஒரு ஆவணப்படத்தில் (Back to the Wild ), 'Chris was so close to become a great adventurer' என ஒருவர் கூறுவார். உண்மையில் கிறிஸ், அலாஸ்காவிலிருந்த அந்த ஆற்றைக் கடந்திருந்தால், -பட்டினியால் இறந்திருக்காது- தனது சாகசப் பயணத்தின் கதையை எங்களுக்கு விரிவாகக் கூறியிருப்பார். Into the...

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' மற்றும் மலைமகளின் 'புதிய கதைகள்'

Tuesday, October 13, 2015

கிளிநொச்சியிலிருந்த 'அறிவமுது' புத்தகசாலையில்தான் தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவலையும், மலைமகளின் 'புதிய கதைகள்' தொகுப்பையும் வாங்கி வாசித்திருக்கிறேன். 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராய் யுத்தகளத்திற்குப் போவதையும் அங்கு மாள்வதையும் மிகுந்த துயரத்துடன் ஒரு தாயின் பார்வையிலிருந்து விபரிக்கிறதென்றால், மலைமகளின் 'புதிய கதைகள்'...

காகிதப்பூ குறிப்புகள்

Tuesday, September 29, 2015

 தீபன் (Dheepan) தீபன் படம் பல சிக்கலான விடயங்களைப் பேச முயல்கின்றது. ஷோபா, காளீஸ்வரி மற்றும் சிறுமியாக நடித்தவரின் நேர்த்தியான நடிப்புடன், திரைப்படமாக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பேசுபொருளாகவும், கதாபாத்திரங்களாகவும் கொண்ட இப்படம் யாருடைய குரலாக ஒலிக்கின்றதென்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. எந்தப் படமாயினும்...

இமையத்தின் 'எங் கதெ'

Wednesday, September 23, 2015

நம் தமிழ்ச்சூழலில் நல்ல படைப்புக்கள் கவனிக்கப்படாது ஒதுக்கப்படுவதும், 'சுமாரான' எழுத்துக்கள் உயர்வுநவிற்சியாக்கம் செய்யப்படுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றவைதான். அந்தவகையில் இமையத்தின் 'எங் கதெ' யிற்கு வழங்கப்பட்ட/வழங்கப்படுகின்ற மதிப்பீடுகள் சற்று அதிகமோ எனத்தான் இக்(குறு)நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது. 'எங் கதெ' அதற்குரிய பலவீனங்களுடன்...

புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்கள்

Monday, September 21, 2015

(ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  ஆகிய தொகுப்புக்களை முன்வைத்து...) இன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய்...