
பாடசாலைக்கால தோழியொருவர் மதிய உணவிற்காய் அவரின் வீட்டுக்கு அழைத்தபோது இரெயின் தண்டவாளம் தாண்டி தெஹிவளைக் கடற்கரையைப் பார்க்கப் போயிருந்தேன். என் பதின்ம வயதுகளில் காதலர்கள் நிரம்பி வழியும் தாழைகளும் இன்னபிற கடற்கரைத் தாவரங்களும் நிறைந்த பகுதியது. தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சிறு கற்களால் எறிந்து நிஷ்டை கலைத்த அனுபவங்களை 'பேயாய்...