
90களில் இயக்கத்தில் இணைந்து, அடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும், கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது. ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றது. போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள், போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.
போராளியாக...