கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பருத்திப்பூ குறிப்புகள்

Monday, September 16, 2019


யூமா வாசுகி காதல் பிரிவைப் பற்றி 'மஞ்சள் வெயிலும்', அக்காவுடனான உறவைப்பற்றி 'இரத்த உறவும்' தனித்தனியே எழுதியதுபோல‌, பிரான்ஸிஸ் கிருபா 'கன்னி'யில் காதலையும், அக்கா முறையான உறவு பற்றியும் கலந்து எழுதியிருக்கின்றார். சிலரால் எழுதி எழுதித்தான் அனுபவங்களைக் கடக்கமுடியும் என்பதுபோலயூமா வாசுகியினதும், பிரான்ஸிஸ் கிருபாவினதும் தன்னிலைகளின் தெறிப்புக்களை இப்புதினங்களில் காணமுடியும். எப்படியெனினும் யூமா ந்த அனுபவங்களிலிருந்து -எழுதிப்பார்த்ததாலோ அல்லது என்னவோ செய்தோ- வெளியே வந்துவிட, பிரான்ஸிஸ் கிருபா அந்த அனுபவங்களின் மாயச் சுழல்களில் சிக்கி வெளியே வரமுடியாது போய்விட்டாரோ என என் வாசிப்புக்களை முன்வைத்து யோசிப்பதுண்டு.

இப்போது அதுவல்ல விடயம். இன்று விருதுகள் பல்வேறு புரவலர்கள்/அமைப்புக்களால் ஒரளவு பரவலாகக் கொடுக்கப்படும் தமிழ்ச் சூழலில், சிலவேளை ஒரு சிலரை மட்டும் அரிதாகக் கண்டுபிடித்ததுமாதிரி விருதுகளைத் தொடர்ந்து அவர்களுக்கே மாறிக் மாறிக்கொடுப்பதால் அது குறித்து பேசவேண்டியிருக்கின்றது.

விருதென்பது ஒருவருக்குக் கொடுக்கப்படுவதால் மட்டுமே அந்த விருது மதிப்படையவேண்டும். அதுவும் எழுதிக்கொண்டும், எழுதுவதால் ஒருவகையான விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும் இருக்கும் பலர் நம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றார்கள். முக்கியமாய் அவர்கள் எவ்வித ஆரவாரங்களுமின்றி இருப்பதால் அவர்களுக்காய் வாசகராகிய நாமே பரிந்து பேசவேண்டியிருக்கின்றது.

ரமேஷ் பிரேதன், பிரான்ஸிஸ் கிருபா, யூமா வாசுகி என்று தமிழகச் சூழலிலும், வெற்றிச் செல்வி, தமிழ்கவி என்று ஈழச்சூழலிலும் உடனே நினைவுக்கு வரும் பலர் இருக்கின்றனர். அவர்களின் ஒருவகையான விளிம்புநிலை வாழ்க்கைக்காக அவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கத்தேவையில்லை, அவர்களின் படைப்புக்களை வாசிப்பவர்கள் நிச்சயம் தமிழ்ச்சூழலின் அங்கீகாரம் இவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்றே நினைப்பார்கள் எனவே நம்புகின்றேன்.. சரியான நேரத்தில் கொடுக்கப்படும் விருதுகளே உண்மையான விருதுகளாகின்றன, மற்றவை பொன்னாடை போர்ப்பதுபோல அந்தக்கணத்துச் சடங்கு மட்டுமேயாகும்.

யாரேனும் விருதுகொடுப்பவர்கள் ஏன் இவர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என்று வந்து கேட்டால், ரமேஷ் பிரேதனின் (பிரேமோடு சேர்ந்து எழுதியதோடு) அவரின் அண்மைக்கால புனைவுகள், யூமா வாசுகியின் இரத்த உறவு, மஞ்சள் வெயில், பிரான்ஸிஸ் கிருபாவின் கன்னி மற்றும் அவரது கவிதைத் தொகுப்புக்கள், தமிழ்கவியின் 'வானம் வெளிச்சிரும், ஊழிக்காலம்', வெற்றிச்செல்வியின் ஒரு போராளியின் காதலி, ஆறிப்போன வலிகளின் காயம்' போன்ற தொகுப்புக்களை முன்வைத்து பத்துப்பக்கங்களுக்கு மேலாய் அவரவர்களின் படைப்புக்கள் பற்றி என்னால் தயக்கமின்றி எழுதிக் கொடுக்க முடியும்,


நேற்றொரு நிகழ்வுக்குப் போயிருந்தேன். ஏற்கனவே அந்த நூலை வாசித்து விமர்சனம் எழுதியிருந்தேன் என்றாலும், ஈழத்தில் இருந்து எழுதுபவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதால் சென்றிருந்தேன். நிகழ்வை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் நடுநிலை என்பதெல்லாம் சுத்துமாத்து, அப்படியெல்லாம் இருப்பவர்கள் அயோக்கியர்கள் என்கின்றமாதிரி முழங்கினார்.எனக்கு ஜோர்ஜ் புஷ் எங்களோடு இருங்கள், இல்லாவிட்டால் நீங்கள் தீவிரவாதிகளின் பக்கம் என முழங்கியது நினைவுக்கு வந்தது. இன்னொருவரோ தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், ஆனால் விமர்சனம் எல்லாம் நூலுக்கு வைக்கக்கூடாதென்று அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மாற்றுக்கருத்தைச் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளா பிஞ்சு மனது அவருக்கு போலும் . என் நண்பர்கள் நிறையப்பேர் அவரிடம் தமிழ் படித்திருக்கின்றனர். நானும் அதேகாலத்தில் இங்கே தமிழ் படித்திருக்கின்றேன், நல்லவேளை இவரிடம் படிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

'
காலம்' செல்வத்தார் மட்டும் கொஞ்சம் நல்லாய்ப் பேசிக்கொண்டிருந்தார். தொடக்கத்தில் எழுதியவரைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தவர், சட்டென்று கம்பனின் பாட்டைச் சொன்னவுடன், 'இதிலிருக்கும் அனுபவங்கள் முக்கியம், ஆனால் இது நாவலாக வரவில்லை' என்று 'சபை நாகரீகம்' மறந்து பேசத்தொடங்கிவிட்டார். இதைத்தான் கம்பன் செய்த வம்பு என்பது.

இந்தப் புதினத்துக்குத்தான் இம்முறை இயல்விருது என்று இடையில் சொன்னார்கள். பேசி முடித்துவிட்டு வந்த செல்வத்தார் என்னிடம் 'முத்துலிங்கத்தாரின் தொலைபேசி இலக்கம் உன்னிடம் இருக்கா என்றார். 'ஏன்' என்றேன். 'இல்லையடா, நான் இது நாவலில்லை என்று சொன்னதை முத்துலிங்கத்தாரிடம் நீ சொன்னால், அந்த மனுஷன் இயல்விருதுக்கு இனி என்னை அழைப்பாரோ தெரியாது. இயல்விருதுக்கென நான் வருடம் ஒருமுறை எடுத்துப்போடுகின்ற கோர்ட் சூட்டைக்கூடப் பிறகு போடமுடியாது போய்விடும்' என்றார் மிகுந்தகவலையுடன்.

என்றாலும் இப்படிச் சொன்னதன்பிறகும் நான் ஏதும் எழுதிப்போட்டுவிடுவன் என்று யோசனை அவருக்கு வர, 'டேய் நான் வேண்டுமென்றால் உனக்கு ஒரு புத்தகம் காசில்லாமலே தாறன், வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்' என்றார். சரி என்று நான் வாயைத் திறக்காமலே தலையை ஆட்ட, நான் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை, அவரது வாகனத்திலிருந்து எனக்கு எடுத்துத் தந்திருந்தார்.

செல்வத்தாருக்கு நன்றி. வாசிக்கின்ற நீங்களும் இதை வாசித்தபிறகு உடனே மறந்துவிடவேண்டும். சரியா என்ன.



ஜூன் பதினொராம் வகுப்புக்குப் போகின்றார். அன்று மழை பெய்கின்றது. புதிதாக வந்த பையன் எல்லோரையும் அன்று விடீயோவில் பதிவு செய்கின்றான். இப்போது ஜூனுக்குத் திருமணம் நடக்கின்றது. அன்று விடீயோவில் பதிவு செய்த பையனே ஜூனின் முதலாவது காதல்/காதலனாக இருக்கின்றான். காதல் பெற்றோரின் தலையீட்டால் பிறகு முடிகின்றது. அடுத்த காதல் ஒரு கடினமான சூழ்நிலையில் ஜூனுக்கு வருகின்றது.

அங்கே இன்னொரு பாடசாலைத் தோழனை ஜூன் சந்திக்கின்றார். அவன், 'உன்னைப் பாடசாலை நாட்களிலிருந்தே நேசித்தேன் எனச் சொல்ல, அவனையும் ஜூன் பிறகு நேசிக்கின்றார். அந்தக் காதலும் இடைநடுவில் முடிந்து போகின்றது.

இறுதியில் ஜூன் பெற்றோர் பார்த்த ஒரு பையனைத் திருமணம் செய்கின்றார். அவரின் பழைய காதலன்கள் திருமணத்திற்கு வருகின்றனர்.

இப்போதும் பதினொராம் வகுப்பின் முதல்நாள் போல மழை பெய்கின்றது. மழையில் நனையும் ஜூனுக்கு அவரது தோழி எதிரே கதைத்துக்கொண்டிருந்த ஆண்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு, விரல்கள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுகின்றார். அந்த மூன்று ஆண்களில் ஜூனை நேசித்தவர்களும், நேசிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

எத்தனைகாலத்துக்குத்தான் ஆண்களின் காதலைச் சொல்லும் ஆட்டோகிராப், பிரேமம் போன்றவற்றைப் பார்ப்பது. பெண்களின் காதல்களுந்தான் எவ்வளவு அழகானது.





0 comments: