கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றின் வழித்தடங்களில்...

Tuesday, March 30, 2021

-குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து-"History is unkind to those it abandons, and can be equally unkind to those make it."-Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights)1.ரஷ்யப் புரட்சி பற்றியும், அதன் முன்னணிப் புரட்சி வீரர்களான செம்படை (red army) பற்றியும் நாம் விரிவாக அறிந்திருப்போம். அவர்களின் புரட்சிக்கால நினைவுகள், உலக மகா...

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

Monday, March 29, 2021

ஒரு குடும்பத்தின் மீது வீழும் சாபம் அந்தக் குடும்பத்தின் தலைமுறைகளைப் பாதிக்கின்றது. ஒரு பெண் அநியாயமாக தன் வாழ்வைப் பலிகொடுக்கின்றாள். தந்தை,சகோதரர்களென அடுத்தடுத்து -இப்பெண் தன் மரணத்தின் பின்பாகப் பலிவாங்க- ஒவ்வொருத்தராகத் தற்கொலை செய்கின்றார்கள். அவ்வாறாக இறந்த அத்தை, அடுத்த தலைமுறையான கதைசொல்லியின் மீது சாபத்தை நிழலாக விழுத்த இவனது வாழ்வும் குலைகின்றது. ஒருமுறை...

வாசிப்பது எளிது!

Saturday, March 27, 2021

ஒவ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றியும், இலக்கிய உலகில் நடக்கும் களேபரங்கள் குறித்தும் பேச ஒன்றுகூடுவோம். அதிலும் மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, பருவம் நான்கும் காதலின் நிமித்தம் மற்ற விடயங்களெல்லாம் வீணென்று குப்புறப்படுத்திருக்கும் என்னைப் போன்றவனுக்கு நண்பர்கள் பகிரும் பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கும்.இம்முறை ஒரு நண்பர், எப்படி உங்களுக்கு இப்படி வாசிக்க நேரம் கிடைக்கிறதென்று ஒரு வினாவை காற்றலைகளில் அள்ளியெறிந்தார்....

மெக்ஸிக்கோ - ஜெயக்குமரன் (JK)

Friday, March 19, 2021

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை...

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன்

Wednesday, March 17, 2021

காதல் என்பது நாம் இதுவரை அறியாத‌ நம் உணர்வுகளின் ஆழங்களைத் தொடுகின்றது. எந்தக் கணத்தில் எப்படி ஒரு காதல் உறவு முகிழுமென்பதையும் அறியமுடிவதில்லை. அதன் முன் நாம் கற்றவைகளையும், அறங்களையும் கைவிட்டு எதுவுமற்றவர்களாய் சிலவேளைகளில் சரணடையவும் செய்கிறோம். இவ்வாறான ஒரு மறக்கமுடியாதக் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை' யில் சொல்லப்போகின்றார்...

Jungle

Tuesday, March 16, 2021

அண்மையில் நண்பரொருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் இன்னொரு நாட்டுக்குத் தனித்துச் சென்ற பயணம் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். வீட்டுக்கு ஒரு காரணத்தையும், வேலைத்தளத்தில் இன்னொரு காரணத்தையும் சொல்லித் தனியே பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு நகரத்திலிருந்து  பஸ்சில்  மலைப்பாங்கான இன்னொரு நகருக்குச் சென்றபோது இடைநடுவில் இறக்கிவிடப்பட்டு நடந்த சில திகிலான...

பட்டிப்பூ (அந்திமந்தாரை) குறிப்புகள்

Monday, March 15, 2021

1. தாமரையாள் ஏன் சிரித்தாள்?ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நம்மை என்ன செய்யவேண்டும்? இன்னும் என்ன என்னவென அவற்றில் கூறியிருப்பதைப் பற்றித்  தேடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் எழுதியிருப்பதை மனமொன்றி இரசிக்கவாவது செய்யவேண்டும். அவ்வாறுதான் உமா வரதராஜனின் 'மோகத்திரை'யை வாசித்தபோது, முதல் பக்கத்திலேயே நடிகை காஞ்சனாவைப் பற்றிய கட்டுரை தொடங்கியபோதே...

ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்

Monday, March 15, 2021

 அய்யனாரை அவர் எழுத வந்த காலத்தில் இருந்தே வாசித்து வந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட நாங்களிருவரும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள் என்று நினைக்கின்றேன். ஆக அவரின் இந்த 'ஹிப்பி' நாவலையும் அவரை வாசித்த வாசிப்புக்களின் தொடர்ச்சியில் வைத்தே பார்க்க விரும்புகின்றேன். ஹிப்பி திருவண்ணாமலையும், அதன் அயலான ஜவ்வாது மலையையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.   இவ்வாறு திருவண்ணாமலையைப்...

ஏதிலி - அ.சி.விஜிதரன்

Sunday, March 14, 2021

 1. இந்தியாவில் இருக்கும் ஈழ ஏதிலிகளின் கதைகளை இந்தப் புதினம் பேசுகின்றது. 14 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய மனிதர்களையும் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்களையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் இன்னமும் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், அங்கே முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ எதிலிகளின் நிலைமையில்  -இன்று...