இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது.
........
ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு,...
யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?
In அனுபவம், In நிகழ்வுSunday, December 26, 2004
இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட...
THE BLACK SUNDAY
In நிகழ்வுSunday, December 26, 2004
போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்....
தோணிகள் வரும் ஒரு மாலை
In இசை, In ஈழம்Saturday, December 25, 2004
இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்
தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய்...
ஜெயமோகனின் நாவல்கள்
In வாசிப்புSunday, December 19, 2004
ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன்.
ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள்...
சொந்தப்புராணம் அல்லது அலம்பல்
In அனுபவம், In நிகழ்வுMonday, December 13, 2004
வாழ்விலே பல விடயங்கள் காரணங்கள் என்னவென்று புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காய் ஒருகணம் தரித்து நிற்பதுவும், பிறகு நீளநடப்பதுவும் வாழ்வியல் நியதி போல. எத்தனையோ மாற்றங்களை, ஏமாற்றங்களை கடந்துவந்தாலும், ஒரு சின்னதுன்பம் கூட என்னை ஒருகணம் அடித்துப்போட்டுவிட்டுத்தான் நகரும்.
இன்றைக்கு வேலைக்கு போய்விட்டு, பின்னேரம் வெளியே போவதற்காய் காரையெடுப்பம் என்டு போனால் கார் நின்ற space கிடக்கிறது, காரைத்தான் காணோம். ஒரு கணம் தலையைச் சுற்றி, பூமி...
அம்பையும் சிறுகதைகளும்
In வாசிப்புFriday, December 10, 2004
அம்பையின், உயிர்மையில் வெளிவந்த, கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி சிறுகதையை வாசித்தபோது நான் நீண்டகாலமாய் தேடிக்கொண்டிருந்த வினாவிற்கு சற்று விடை கிடைத்தாற்போலத் தெரிந்தது. எப்போதும் தேடல்,இருத்தல், இருத்தலின்மை/போதாமை என்ற சொற்களை ஆண்களாகிய நாங்கள் மட்டும் பாவித்து எழுதிக்கொண்டிருக்கும்போது இவைபற்றிய பெண்களின் அவதானங்கள் எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.
.............
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்...
இருத்தல் இருத்தலின்மை...
மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்-2
Tuesday, December 07, 2004
சில அவசரக்குறிப்புக்கள்
கடந்த பதிவிற்கான கருத்தாய், சுகுமாரன் எழுதிய தற்கொலை பற்றிய கட்டுரை வாசித்தீர்களா என்று ஒரு நண்பர் எழுதியிருக்க, அந்தக்கட்டுரையை வாசிக்கவேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று. இங்கே ஒரேயொரு கடையில்தான் காலச்சுவடு, உயிர்மை விற்பனையாகிறது. எனக்கு அந்தக் கடைக்காரருடன் அவ்வளவு ஒத்துவராதது என்பதால் அங்கே போவது மிகவும் குறைவு. ஞாயிற்றுக்கிழமை ஒரு விடயம் காரணமாக அந்த இடத்திற்கருகில் போகவேண்டியிருந்தததால், நவம்பர் உயிர்மையும்,...
மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்
In பத்திSaturday, December 04, 2004
சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் தனது கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். நல்லவேளையாக இரண்டு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டன. சுதந்திரம், வசதிகள் என்று இன்னபிற விடயங்கள் கோலோச்சுகிற இடத்தில்தான் இப்படியான கொடூரமான விடயங்கள் அதிகம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வந்தது. இந்தப்பெண்ணும், அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றதால் வருகின்ற ஒரு உளவியல் வியாதிக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று இப்போது காரணம் சொல்கிறார்கள்....
புலம்பெயர் நாவல்கள்
In வாசிப்புSunday, November 21, 2004
புலம்பெயர் நாவல்கள் பற்றிய சில குறிப்புக்கள்
ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி', தமிழில் முக்கியமான நாவலென பலர் எழுதியுள்ளனர். இதன்ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு விதச் சலிப்புத்தட்டினாலும் (செட்டியார் வட்டிக்கடைப் பகுதி), பின்னர் ஒரே நீட்சியாக நாவலில் அமிழ்ந்து போகமுடிந்தது. ஆனால் செட்டியார் வட்டிக்கடைப் பகுதிகள் கூட ஒரு அத்தியாவசிய நோக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று நாவலை முழுதாய் வாசித்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த நாவல்,...
Eminem
In இசைSaturday, November 20, 2004
Eminem 'n' Encore
Eminemத்தின் பாடல்களை சிலவருடங்களுக்கு முன் கேட்டபோது, அவர் ஒரு women-hater என்ற அறிந்தபிறகு அவரது பாடல்களுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விட்டது. எனினும் அவ்வப்போது MTVயில் அவரது பாடல்களை காட்சிப்படலங்களாய் பார்க்கும்போது அவரது எள்ளலும் கிண்டலும் மற்ற artists (கலைஞர்கள்?) களில் இருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது.
சில மாதங்களுக்கு முன் தான் அவரையும் அவரது பாடல்களையும் ஆழமாய் அறியவேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது....
*Well i din kow old ppl can be like diz
In அனுபவம்Tuesday, November 16, 2004
இன்று காலமை எழும்பி வெளியே வெளிக்கிட்டபோது, மாலையில் சிலவிடயங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். பிறகு மதியப்பொழுதில் ஒரு தோழியுடன் இணையத்தில் ஒரு விடயம் பேசியபின் சோம்பலில்லாமல் இரவிற்குள் பதிப்பித்திடவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தபத்தியின் முடிவில் தோழி சொன்ன விசயத்தைச் சொல்கிறேன்.
நான் இப்போது எழுதப்போகிற விசயங்கள் சிலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இருபத்துநான்கு மணித்தியாலமும் பேசக்கூடிய மூன்று நான்கு...
கஸ்தூரியின் ஆக்கங்கள்
In வாசிப்புTuesday, November 16, 2004
ஓர் அறிமுகம்
கஸ்தூரி அவரது கவிதைகளினால் பரவலாக அறியப்படுகின்றவராயினும், நல்ல பல சிறுகதைகளையும் தனக்குரித்தான உலகினுள் நின்று படைத்துள்ளார். சிவரமணி, செல்வி போன்றோர் தீவிரமாய் இயங்கியபொழுதிலே இவரது பல ஆக்கங்களும் எழுதப்பட்டதாய் தெரிகிறது. சிவரமணியைப்போலவே மிக இளம்வயதில் (22 வயதில்) இவரும் அகால மரணமடைந்தவர். 'கஸ்தூரியின் ஆக்கங்கள்' எனத் தொகுப்பட்ட இவரது தொகுப்பிலே, ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப்...
பச்சை தேவதை
In வாசிப்புSunday, November 14, 2004
சல்மாவின் 'பச்சை தேவதை'சில அவசரக்குறிப்புக்கள்
சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் பச்சை தேவதை வந்திருக்கிறது. முதலாவது தொகுப்பு (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்) பெற்ற கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவில்லையெனினும் அண்மைக்காலத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்புகளில் அதிகம் ஏமாற்றம்தராத தொகுப்பு இதுவென துணிந்து சொல்லாம். சல்மாவின் உலகம் எப்போதும் மனித உறவுகளை அதிகம் கவனித்தபடியே இருக்கிறது. அது வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் திரிந்தால் என்ன உறவுகளே...
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்
In வாசிப்புSaturday, November 13, 2004
சி.புஸ்பராஜாவின், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
எனது குறிப்புக்களும், சில அவதானங்களும்
இலைமறைகாயாக மறைக்கப்பட்ட வரலாற்றின் இருண்மையான பக்கங்களைப் பற்றிப்பேசும் எந்தப் புத்தகமும் எனக்கு சுவாரசியமூட்டக்கூடியன. அந்தவகையில், சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' முக்கியமான ஒன்று. வரலாற்றை அதனுடன் சம்பந்தப்படாத அடுத்த தலைமுறை வாசிக்கும்போது/அறியும்போது உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், அதிலிருந்து முற்றாக விலகியிருந்து...
Subscribe to:
Posts (Atom)