-El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-
சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, 'சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின் தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்' என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது....
பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்....
In நிகழ்வுFriday, December 29, 2006
'"இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?" என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.'
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க....)
வெங்கட்...
கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு
In அனுபவம், In புனைவுMonday, December 25, 2006
'உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.'
(ரமேஷ்:பிரேமின் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை')
உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு...
சு.வில்வரத்தினம் காலமானார்
In நிகழ்வுSaturday, December 09, 2006
(1950-20006)
ஈழத்தின் முக்கிய படைப்பாளியான சு.வி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் கொழும்பில் காலமானார் என்ற மின்னஞ்சல் பத்மநாப ஜயரிடமிருந்து இன்று காலை வந்திருந்தது. ஏ.ஜே.கனகரட்ன, சு.வில்வரத்தினம் என்று ஈழத்தில் இருக்கும் படைப்பாளிகளை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகவும் துயரமானது.
சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும்...
புத்தகங்களுடனான சிநேகம்
In நிகழ்வுWednesday, December 06, 2006
'ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்... விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து...
நாககன்னி
In கவிதைகள்Thursday, November 30, 2006
போர் பேரலையாகி
மூர்க்கமாய் எற்றித்தள்ள
சமுத்திரங்கள் தாண்டி
பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன்
புரட்டுகின்றான்
பூர்வீகநிலம் அபகரிக்கப்படும்
வரலாற்றின் பக்கங்களை
இவன்
இருப்பிழந்த வலியின்
கனந்தாங்காது துடித்த தேவதைகள்
மழைக்காலத்தில் அனுப்பிய
நாககன்னியுடன்
பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க
அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின
குழந்தைகள் குதூகலத்துடன்
இங்கு
வாழ்வு செழிப்பாகவும்
இயற்கை தாலாட்ட
எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும்
தற்செயலாய் வந்திறங்கிய
கடற்கொள்ளையரிடம்
செய்தி...
'வாழும் தமிழ்'
In நிகழ்வுSaturday, November 25, 2006
-காலம் சஞ்சிகை ஆதரவில் நடந்த புத்தகக்கண்காட்சி-
(ரொரண்டோ)
திரைப்படங்கள் திரையிடல், இன்னிசைக்கச்சேரி போன்றவற்றோடு 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சி நடந்தேறியது. திரையிடலின்போது குறித்த நேரத்துக்குப்போக முடியாதபோதும், இன்னிசைக் கச்சேரியை கேட்கமுடிந்தது. நீண்டநாட்களுக்குப் பின் பாரதியார் பாடல்களை இசையுடன் இனிய குரல்களுடனும் கேட்டது நல்லதொரு அனுபவம்.
வாங்கிய...
மூன்று பெண்களின் கவிதைகள்.
Thursday, November 23, 2006
எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது நீஎனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்அது உன்னிடமிருந்துஎதையும் எதிர்பார்ப்பதில்லை.நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்அது உன்னைசொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.ஒருசமயம்ஓர் இருண்ட இரவில்என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்துஅன்பைக் கொட்டினார்கள்.நான் உறங்கும்போதுநிகழ்ந்தது இந்த சினேகதானம்.விழித்தபோதுஇதயத்தின் கரைமீறிப்பொங்கும்நேசப்பெருவெள்ளம்.துக்கப்படுபவர்களும்தனிமையானவர்களும் வந்துதட்டிப்பறித்தனர் அதை.எனினும்மிஞ்சிய...
சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்
In அனுபவம், In புனைவுThursday, November 09, 2006
I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.
('Lesson' by Maya Angelou)
புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும்...
புதினம்
In வாசிப்புFriday, October 20, 2006
-கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-
நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான...
எனக்கான தெருக்கள்
In அனுபவம், In புனைவுThursday, October 12, 2006
நான்கு பருவங்களில் பிடித்த பருவம் எதுவென்றால் இலைதுளிர்காலம் என்று தயங்காமல் சொல்வேன். இயற்கையின் நடனத்தினால் தெருக்களுக்கு வெவ்வேறு வர்ணம் வந்துவிடுவதைப் போல, பருவங்களுக்கேற்ப தெருக்களுக்கு விதம்விதமான வாசனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? மழை பெய்து சுத்தமாய்த் துடைத்துவிட்ட, அதிகம் வாகனங்கள் பயணிக்காத ஒரு தெருவில் என்னைப் போல இப்போது நீங்கள் நடந்துகொண்டிருப்பீர்கள்...
தொலைதல்
In கவிதைகள்Thursday, October 05, 2006
(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்
பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்
'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு...
அகாலம்
In கவிதைகள்Tuesday, September 19, 2006
நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில்
புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன்...
In
கவிதைகள்
Friday, September 15, 2006
பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்
கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை
தமக்கான இரையாக்குகின்றன
வட்டமிடும் வல்லூறுகள்
புறமுதுகிட்டு
பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தேத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை...
ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!
In அனுபவம், In இசைMonday, September 11, 2006
-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்-
சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000...
வாசிப்பு இடைமறிப்பு
In வாசிப்புWednesday, September 06, 2006
ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....
' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு...
Subscribe to:
Posts (Atom)