"நான் யன்னலுக்கருகில் வைத்திருந்த ஹேஸேயின் தட்டெழுத்து இயந்திரத்தில் கைவைத்தபடி, அதற்கப்பால் கிளைகள் விரித்துச் சடைத்திருந்த மேப்பிள் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இந்த வாழ்க்கை என்றால் என்னவென கேள்விகள் வந்து என்னைப் பதற்றமடையவைக்கும் ஒவ்வொருபொழுதிலும் ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுவிடும் 'சித்தார்த்தா'வை, ஹேஸே இப்படித்தானே ஏதோ ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருந்திருப்பார்...
உதிரியாக இருத்தல்!
In இன்னபிறThursday, December 30, 2021
நேற்று முழுதும் விளையாட்டு மைதானத்தில் இருந்தேன். இம்முறை இலையுதிர்காலத்தின் தொடக்கமே உடலை உருக்கும் குளிராக மாறிவிட்டிருக்கின்றது. யாழில் அருகருகிலிருக்கும் இரண்டு பாடசாலைகளின் Big Match. முப்பது ஓவர்களில் எதிரணியினரை 139இற்குள் அடக்கிய சிறப்புப் பந்துவீச்சு எமக்கு இருந்தது. எட்டவேண்டிய இலக்கு அவ்வளவு கடினமில்லை என்றபோதும் 50 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்துவிட்டிருந்தோம். அதிலும் கடந்த வருடத்திலும், அதற்கு முதல் வருடத்திலும்...
வேலைக்குச் செல்லுதல்
In அனுபவப்புனைவு, In இன்னபிறTuesday, December 28, 2021
நெடும் மாதங்களுக்குப் பிறகு, முழுநேரமாக வேலைத்தளத்துக்குப் போகத் தொடங்கியிருந்தேன். எல்லாமே ஒருவகை சர்ரியலிசம் போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. சூரியனே வெளிவரத் தயங்கும் பனிக்காலத்தில் விடிகாலையில் எழுந்து பஸ், ரெயின் என எடுத்துப் போவதை நினைக்க ஒருவகை அயர்ச்சி வந்தது. போக வரவென கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் பயணம் அவ்வளவு மனதுக்கு உவப்பாவதில்லை.ஆனால் இந்த வகைப் பயணங்களில் புத்துயிர்ப்புத் தருவது என்னவென்றால், வெவ்வேறான...
Zen is right here
In தமிழாக்கம், In வாசிப்புSunday, December 26, 2021
Zen is right here என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இது Shunryu Suzuki Roshi என்ற ஜப்பானிய ஸென் ஆசிரியரிடம் கற்ற மாணவர்/கள் தொகுத்த நூல். அதில் சிலவற்றை இங்கே தமிழாக்கிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பு வந்தது. அவற்றில் சில...ஒரு மாலை நேர விரிவுரையின் பின், கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார், "நீங்கள் ஸென் எல்லா இடத்திலும் இருக்கின்றது எனச் சொல்கின்றீர்கள்....
புத்தகக் கண்காட்சி
In இன்னபிறSunday, December 26, 2021
சில காலத்துக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது நண்பரொருவர் எனது புத்தகம் ஏதாவது கிடைக்குமாவென வாங்கப்போயிருக்கின்றார். நடத்திக் கொண்டிருந்தவருக்கு எனது பெயரோ அல்லது நானெழுதிய புத்தகங்களைப் பற்றிய எந்த அறிமுகமோ இல்லை. அது அவரின் தவறும் இல்லை. எனக்குந்தான் அவரை யாரெனத் தெரியாது. நண்பரோ, 'எங்கட நாட்டில் இருக்கும் எல்லாப் புத்தகங்களும்...
முள்ளிவாய்க்கால்
In சிறுகதைThursday, December 02, 2021
முள்ளிவாய்க்கால்
-இளங்கோ
1.
நான் கொழும்பில் போய் இறங்கியபோது வெயில்
எரித்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதில் வெளியில் போகவும் எரிச்சலாக
இருந்தது. இந்தப் பயணத்தின்போது அவளை எப்படியாகினும் தவறாது
சந்தித்துவேண்டுமென நினைத்திருந்தேன். அவள் முள்ளிவாய்க்காலுக்குள்
கடைசிவரை இருந்து தப்பி வந்தவள். கொழும்பிலும், தனது ஊரிலுமாக மாறிமாறி இப்போது வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளை அவளின் ஊரில் சென்று சந்தித்தல் அவ்வளவு எளிதில்லை என்பதால், எப்படியேனும்...
Subscribe to:
Posts (Atom)