கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தாய் என்னும் எனது வழிகாட்டி - 02

Friday, April 29, 2022

 4.வியட்னாமில் அமெரிக்கா செய்யும் யுத்தத்தை நிறுத்த, மாட்டின் லூதர் கிங்கோடு தாய் கரம் சேர்ந்தவர். மாட்டின் லூதர் கிங் அன்றையகாலத்தில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காய் தாயை பரிந்துரையும் செய்திருக்கின்றார். இவ்வாறு சமாதான நடவடிக்கையில் ஒரு புத்த துறவியாக இருந்தபோதும் ஈடுபட்டதாலேயே, அன்று அமெரிக்கச் சார்புடைய தென் வியட்னாமிய அரசால் தாய், அமெரிக்காவிலிருந்து...

தாய் என்னும் எனது வழிகாட்டி – Thich Nhat Hanh

Thursday, April 28, 2022

1.எனது ஆசிரியரான தாய் (Thich Nhat Hanh) மறைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவரின் நினைவுகளோடு இருந்தேன். அவர் வியட்னாம் யுத்தத்தின்போது, சொந்த நாட்டிலிருந்து 1960களில் வெளியேற்றப்பட்ட பின், பிரான்ஸின் தென்பகுதியில் 'பிளம் கிராமம்' (Plum Village) அமைத்து தனது கற்பித்தல்களைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்.ஒரு ஸென் துறவியாக மட்டுமின்றி, அவர் ஒரு கவிஞரும் கூட....

மிலான் குந்தேரா - 02

Tuesday, April 19, 2022

இருப்பின் இறகிழத்தலும்,  அபத்தத்தின் வசீகரமும்***************Laughable Lovesஆங்கிலத்தில் வெளிவந்த ஒரேயொரு குந்தேராவின்  சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் குந்தேரா செக்கில் 1958-1968இல் இருந்தபோது எழுதிய கதைகளாகும். அவர் ஒருபோதும் செக் என்று எழுதுவதில்லை, பொஹிமியா என்றேதான் தனது தாய்நாட்டைக் குறிப்பிடுகின்றார். கதைகளிலும்...

மிலான் குந்தேரா - 01

Sunday, April 17, 2022

இருப்பின் இறகிழத்தலும், அபத்தத்தின் வசீகரமும் 1.மிலான் குந்தேராவுக்கு இப்போது 90 வயதுக்கு மேலாகிவிட்டது. அன்றைய செக்கோஸ்லாவாக்கியாவில் (1929) பிறந்த குந்தேரா அவரது தாய்நாடு ஒரு நூற்றாண்டில் சென்று வந்த பல மாற்றங்களைப் பார்த்திருக்கின்றார். முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள், செக்கில் பிரசித்தபெற்ற புரட்சியான 'ப்ராக் வசந்தம்',  அதன் பின்னர் அன்றைய...

எஸ்.பொவின் 'முறுவல்'

Saturday, April 16, 2022

எஸ்.பொன்னுத்துரை - பகுதி 08 1.எஸ்.பொ, பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்த புலம்பெயர்ந்தவர்களை இணைத்து தமிழ் ஊழியம் செய்யவேண்டும் என்ற பெருங்கனவோடு கனடா வந்தபோது, நான் அவரின் வெகுசிலவான ஆக்கங்களை மட்டுமே வாசித்திருந்தேன். எனினும் எஸ்.பொ என்கின்ற ஆளுமை என்னை ஈர்க்க அவரைப் பின்தொடர்ந்து அவர் பங்குபற்றிய சில கூட்டங்களுக்குத்  சென்றிருக்கின்றேன். ஒரு நிகழ்வு...

எஸ்.பொவின் 'நீலாவணன் நினைவுகள்'

Saturday, April 09, 2022

 (எஸ்.பொ - பகுதி 07)'இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவன் நான்' என்ற இறுமாப்புடன் என்னை 'வித்தக விமர்ச'கனாகவோ, ஞானம் பாலிக்கும் 'ஆசானா'கவோ இலக்கிய உலகிலே நானை திணித்துக் கொண்டனல்லன். அன்றும், இன்றும், நாளையும் அந்த இனிய உலகிலே நான் பரமார்த்த ஊழியனே. 'நான் இலக்கிய உலகிலே இவற்றைச் சாதித்துவிட்டேன்' என்று எதையாவது தொட்டுக்காட்டவும் கூச்சப்படும் ஒரு முதிர்ச்சியும்...

கனடாவின் வடக்கு நோக்கிய பயணம் - 02

Monday, April 04, 2022

1. Sudbury நகரின் காட்சிகளின் இருந்து இயற்கையை இன்னும் ஆழமாய்த் தரிசிக்க வேண்டுமென்றால், Onaping Falls இற்குப் போய்ப் பார்க்கலாம். போகும்பாதையெங்கும் காடுகள் விரிந்துகிடக்கும், அதனூடு காரோட்டிப் போகும்போது மனது தெளிந்து துல்லியமாகும்.இது Onaping Falls  என இப்போது அழைக்கப்பட்டாலும், Onumunaping என்றே பூர்வீகக்குடிகள் அழைத்திருக்கின்றனர். இதன் அர்த்தம்...