கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 47

Saturday, October 05, 2024

 

ண்மையில் அரவிந்த்சாமி, பெண்கள் என்னை அளவற்று விரும்ப என் கதாபாத்திரங்களே காரணமே தவிர, அதில் என் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் எந்தப் பெண்ணும் என்னை நேசிக்க முன் வரமாட்டார்கள் எனச் சொல்லியிருப்பார். இதை வாசித்துவிட்டு நண்பரிடம், 'அப்படியாயின் பெண்கள் அர்விந்த்சாமி நடித்த படங்களை இயக்கியவர்களையோ அல்லது அந்தப் பாத்திரங்களை வடிவமைத்த திரைக்கதையாசிரியர்களையோதான் உண்மையில் நேசித்திருக்க வேண்டும் அல்லவா எனச் சொன்னேன்.

இதற்கு அண்மையாக வரும் விடயத்தை வைத்து ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருப்பார். 'மலர்த்துளி' என்கின்ற காதல்கதைகள் மட்டுமே கொண்ட அத்தொகுப்பில் 'என்னை ஆள' என்பதுதான் அந்தக் கதை. கதையின் நாயகன் தன் தொழிலின் கணக்காய்வு நிமித்தம் இன்னொரு இடத்துக்குப் போகும்போது ஒரு பெண் மீது மையல் கொள்கின்றான்.

அந்தப் பெண்ணோடு அவன் ஒருபோதும் நேரில் பேசுவதில்லை. கண்ணாடி அறைக்குள் இருந்து அவள் வேலை செய்யும்போதும், தோழியோடு பேசும்போது மட்டுமே காண்பவன். அவனின் காதல் என்பது அவளின் குரலின் இனிமையால் சாத்தியமாகின்ற ஒன்று. இப்படியே தூரத்திலிருந்து காதலை வளர்க்கின்ற அவன், அவளோடு பேசிக் காதலைத் தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கின்றான்.

ஒரு குரல் மீது அப்படியொரு பைத்தியம் பிடித்து காதலில் வீழ்கின்ற அவனுக்கு இறுதியில் நிகழ்வதோ அதிர்ச்சி. அவன் கண்ணாடி அறைக்குள் இரசித்த பெண்ணுக்கு உரியதல்ல அந்தக் குரல். அது அவளது தோழிக்குரியது. இவன் தற்செயலாக தோழியின் குரலைக் கேட்டே காதல் வயப்பட்டிருக்கின்றான். ஆனால் அவன் பார்த்து கற்பனை செய்த பெண்ணின் உருவமோ மற்றவளுடையது.

இப்போது வாசகர்களுக்கு அவன் யாரை இனி உண்மையில் காதலிப்பான் என்ற சுவாரசியம் வரும். அவன் சொக்கிப் போன குரலையுடைய பெண்ணையா, அல்லது அவன் புறத்தோற்றத்தில் குரலோடு கற்பனை செய்த மற்றப் பெண்ணையா என்பது. ஜெயமோகன் படைப்பாளியாக, அவன் மிக விரும்பிய குரலையுடைய பெண்ணை விடுத்து, மற்றப் பெண்ணைத் தெரிவு செய்வதாக முடித்திருப்பார். அவன் அதற்குள் ஒரு தீர்மானத்துக்கு/சமரசத்துக்கு வந்திருப்பான்.

ஒருவகையில் இது அரவிந்த்சாமி சொன்னதுபோல அன்றி, அகம் கிளர்த்தும் காதல் என்பது முக்கியமில்லை, புறத்தோற்றமே முக்கியமென ஜெமோ முடித்தது சரியல்ல என்று நண்பரிடம் விவாதித்து இருக்கின்றேன்.

னெனில் என் வாழ்வில் நான் பெண்களின் குரல்களின் வசீகரத்துக்குள் மயங்கியவன். சில விதிவிலக்குகள் தவிர்ந்து எனது எல்லாக் காதல்களும் தொலைதூரத்துக் காதல்கள். அந்தக் காதல்கள் அனைத்திலும் என்னைக் காதலின் ஆழத்துக்குள் இழுத்துச் சென்றது அந்தந்த பெண்களின் இனிமையான குரல்கள் மட்டுமே. அந்தக் குரல்களும், அவர்களின் உரையாடல்களுமே என்னையோ அல்லது அவர்களையோ நாம் நேரில் சந்திக்கின்றபோது புறத்தோற்றம் சார்ந்து எந்தப் புறக்கணிப்புக்களையும் செய்யவிட்டதில்லை. நாங்கள் மனதார நேசித்திருக்கின்றோம், பின்பு வேறு காரணங்களால் பிரிந்திருக்கின்றோம். அது இங்கு அவ்வளவு முக்கியமானதுமல்ல.


எனவே 'என்னை ஆள' பாத்திரத்தில் இயல்பாகவே என் மனம் கதையின் நாயகன் முகந்தெரியாத அந்த இனிய குரலுடைய பெண்ணையே தேர்ந்தெடுக்க வேண்டுமென விரும்பியது. இந்த வாழ்க்கையே சமரசங்களால் ஆனது என்பதும் நன்கு தெரியும். சிலர் தங்கைகளை விரும்பி காதல் யாகம் வளர்த்து அக்காக்களை இறுதியில் மணந்தது எல்லாம் அறிந்திருக்கின்றேன். அவ்வாறே பெண்களுக்கும் நிறையச் சமரசங்கள் இருக்கும்.

அவரவர்களின் வாழ்க்கையில் இதன் நிமித்தம் ஏக்கங்களை நிறையச் சுமக்க வைத்திருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், நமக்கு விரும்பியவை எல்லாம் வாழ்க்கையில் கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக உடனே வாழ்ந்துவிடக் கூடியவர்களா என்ன நாம்?

********************

0 comments: