கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று திரைப்படங்கள்

Wednesday, July 29, 2015

'நினைவு' பெறுமதியானது

'Still Alice' படத்தை நண்பரொருவருடன் சேர்ந்து பார்த்தேன். என்னால் இவ்வாறான நோய்களின் பாதிப்பைச் சொல்லும் படங்களைப் பார்க்க முடிவதில்லை. நண்பரோ இது நாளை உன்க்கோ அல்லது எனக்கோ நடக்கவும் கூடியது, ஒஸ்காரிலும் விருதுபெற்ற படம் நீ பார்க்கத்தான் வேண்டுமென இழுத்துச்சென்றார். அவர் பணிபுரிவதும் இவ்வாறான நோயாளிகளுடன் சம்பந்தப்பட்டது. எப்படி Alzheimer ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் குழந்தைத்தன்மைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள் என்பது பற்றியும், நாங்கள் கூறுவதை நம்பாது, தங்கள் 'ஞாபகத்தில்' இருப்பதே சரியென்று அடம்பிடிப்பார்களென்றும் கூறிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர்களைச் சமாளிக்கமுடியாது role play செய்யவேண்டியிருக்குமென படத்தோடு ஒன்றிப்போன அவர் எனக்கும் இது பற்றி மேலும் விரித்துச் சொல்லிக் கொண்டு போனார்.

என்னைப் போன்ற இந்நோயைப் பற்றிய அவ்வளவு அறிதலற்ற எளிய பார்வையாளரும் விளங்கும்படியாக (ஆழமாகப் போகாவிட்டாலும்) இப்படத்தை எடுத்திருக்கின்றார்கள். இப்படி 'நினைவு' மெல்ல மெல்ல அழிந்து போகும்போது இங்கே வளர்ந்து பிறந்தவர்க்கும், எம்மைப் போன்ற இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்ந்தவர்க்கும் இருக்கும் வித்தியாசங்கள் பற்றியும் நண்பர் விளக்கிக்கொண்டிருந்தார் (அவரின் அனுபவத்தில் நம்மவர்களின் நிலை மோசமானது, முக்கியமாக நம்மிடையே இதுகுறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவ்வாறானவர்களை விளங்கிக்கொள்வது மிகச் சிக்கலாக இருக்கிறது. அத்துடன் இந்நோய் பராமரிப்பில் தாக்கம் செலுத்தும் பொருளாதார வசதி, வாழ்ந்த/வளர்ந்த விதம்). அதுவும் நாம் சிறுவயதில் ஏதாவது வகையில் oppressed செய்யப்பட்டிருந்தால் அது இந்நோயின் பாதிப்பில் தெளிவாகத் தெரியும் என்றும் சொன்னார்.

படம் எப்படியென்று நண்பர் படம் முடிந்தபோது கேட்டார்.

கடந்தகாலத்தின் 'நினைவு'களை அழிப்பதுதான் கஷ்டமானது, அதற்கு எதிராகத்தான் இன்றையபொழுது நிறைய போராடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நினைவுகளோடு வாழும் நாம் ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போலத் தோன்றுகினறது எனச் சொன்னேன்.

Alzheimer நோயோடு தத்தளித்துக்கொண்டிருப்பவர்க்கு, நினைவு/நினைவுபடுத்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினையாக இருக்கும் 
(Feb 27, 2015)


து குறித்து அஞ்சியதோ அல்லது எவை குறித்து விமர்சனம் வைத்து எள்ளல் செய்ததோ, இறுதியில் எதிர்த்த பாதையிற்கே திரும்பிச் செல்லவேண்டியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

...அல்லது எதை எதிர்க்கின்றோமே, அதன் மீதே நமக்கு தீரா விருப்பு ஒருவகையில் வந்துவிடுகின்றது, ஆகவே அதையதை அதன் இயல்பில் விட்டுவிடலாம் என்று ஒரு கருத்தை மறைமுகமாய்ச் சொல்ல வருகின்றதெனில் அதைப் பாராட்டலாம்.எனக்கு செல்வராகன் முன்வைக்கும் காதல்களே அநேகமாய்ப் பிடித்திருக்கின்றன. மணி ரத்னமும், கெளதம் வாசுதேவனும் சித்தரிக்கும் காதல்களில் அழகியல் இருப்பினும் பார்க்கும்போது ஏதோ ஒருவகையான விலகல் வருவதுண்டு.துல்ஹருக்கும் நித்யாவிற்குள்ளும் முகிழும் உறவைவிட, பிரகாஷ் ராஜிற்கும் அவரது துணைவியாருக்கும் இருக்கும் காதல் நெகிழ்வாகவும் நெருக்கமாகவும் இருந்தது. 
(apr 19)


ண்மையில் ஒரு குறும்படம் பற்றி நிறையப்பேர் சிலாகித்து எழுதுவதைப் பார்க்கின்றேன். இப்படம் பல மாதங்களுக்கு முன் கருத்தையறிவதற்காய் எனக்கும் அனுப்பப்பட்டடது. இதில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் இப்படம் பொதுவெளியில் எல்லோருக்குமாய்ப் பகிரப்படும்போது அதை முன்வைக்கின்றேன். எனினும் முயற்சியிற்கு வாழ்த்துச் சொல்லி அந்த நண்பருக்குப் பதில் அனுப்பியிருந்தேன்.

அந்தப் படத்தின் கதை சொல்லும் பின்னணியைப் பற்றி சிறிது அறிந்தவர்கூட அதிலிருக்கும் பல வழுக்கள் பற்றி எளிதாய்ச் சொல்லிவிடமுடியும். மேலும் துயரத்தை ஓவென்று தொடர்ச்சியாக அழுதுதான் சொல்லவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. அப்படி திரையில் கண்ணீர் சிந்தாமலே நமக்குக் கண்ணீர் வரச்செய்த எத்தனையோ படங்கள் இருக்கின்றன.

சரி ஆகக்குறைந்தது திரையில் அழுகின்ற காட்சியைத் தவிர்க்கத்தேவையில்லை, ஆனால் அளவுக்கதிகமாக அழுவது நாம் கூறவந்த விடயத்தை நீர்த்துவிடச் செய்துவிடும் என்பதை அறிவதும் கூட கலையல்லவா? அவ்வாறு ஒரு முக்கியமான விடயத்தை நீர்த்துவிடச்செய்ததற்கு உதாரணமாக இங்கு நடந்த திரைப்படவிழாவிற்கு நடுவராக இருந்தபோது பார்த்த 'கிளிநொச்சி' என்ற ('நிழல்கள்' ரவி நடித்த) படம் நினைவுக்கு வருகின்றது.

இந்தப்படம் மோசமான படம் என்றல்ல நான் கூறவருவது. இதைவிட சிறந்த குறும்படங்களைப் பார்த்தவன் என்றவகையில் இதிலிருக்கும் பலவீனங்களைத் தெளிவாகக் கண்டடைய முடிகிறது என்பதையே குறிப்பிட விழைகிறேன். இன்னொருவிடயம், இந்தப் படத்தை இயக்கியவரின் நண்பர்கள் அல்லது புதியவர்கள் பாராட்டுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படங்கள் மீது பித்தமுள்ள, நான் மதிப்பவர்கள் பலர் கூட இதை விதந்து பாராட்டுவதைத்தான் சகித்துக்கொள்ள சற்று முடியாதிருக்கின்றது. அதிலும் ஒருவர் நீண்டகாலம் திரைப்படங்கள் பற்றி நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவர், இப்படத்தின் வழுக்கல்/அதீத உணர்ச்சி குறித்து எதுவுமே கவனிக்காது பாராட்டியதை வாசிக்கும்போது இவர்கள் எல்லாம் இதற்காகவா இவ்வளவு காலம் எழுதித்தீர்த்தார்கள் என்ற சலிப்பே வருகிறது.

மேலும் விருதுகள் நிறைய கிடைப்பதாலோ, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலோ மட்டும் ஒரு படம் நல்ல படமாகிவிடும் என்றுமில்லை. அத்ற்கு 'செங்கடல்' உட்பட நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு புதியவர், இளைஞர் என்றவகையில் இந்தப் படத்தை எடுத்தவரைப் பாராட்டுவதில் பிரச்சினையில்லை. ஆனால் துருத்திக்கொண்டிருக்கும் வழுக்களை முன்வைக்காத விமர்சனமில்லாத பதிவுகளால் நாம் அவரை முன்னகர்த்துவதற்குப் பதிலாக, புதைகுழியிற்குள் இறக்கிவிடும் ஆபத்தே உண்டு.

கடந்த சில வருடங்களில் கலை இலக்கியங்களில் கொஞ்சம் நம்பிக்கை தந்தவர்களையே அதீதமாய்ப் புகழ்ந்து அவர்களை ஒரே வட்டத்திற்குள் பரிதாபமாய்ச் சுழலவிட்ட உதாரணங்கள் நம்மிடையே நிறைய உள்ளன. மேலும் படைப்பிலக்கியங்கள் மீது காதல் கொண்டவர்கள் காத்திரமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒருபோதும் கடந்து செல்லவும் போவதில்லை. ஒரு படைப்பாளி இன்னும் சிறந்த படைப்புக்களைத் தரவேண்டும் என்று விரும்பினால் உரிய விமர்சனங்களை உரிய காலத்தில் தெளிவாய் முன்வையுங்கள். அதுவே ஒருவகையில் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கவும்கூடும்.
(feb 25)

0 comments: