
தங்கத்தோடு மட்டுமில்லை, தங்கச் சுரங்கங்களோடும் மனிதர்கள் காலங்காலமாய் பகடையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பாக் கணடத்திலிருந்து தங்கம் மீதான பேராசையுடன் கொடுங்குளிரையும் பாராது, ஒரு பெரும் மக்கள் திரள் வட அமெரிக்காவிற்கு வந்திருந்தது கடந்தகால வரலாறு. Gold என்கின்ற இத்திரைப்படத்திலும் கனிமச்சுரங்களைக் கண்டுபிடிக்கும் ஒருவன் சொல்வான்: கொலம்பஸ் தன் நாட்டு இராணிக்கெழுதிய...