(எஸ்.பொ - பகுதி -02) 1. எஸ்.பொ, அவரின் முதலாவது புதினமான 'தீ'யை எழுதியபோது அவரது இருபதுகளில்
இருந்திருக்கின்றார். அது பின்னர் அவரது 29 வயதில், சரஸ்வதி
பதிப்பகத்தால் 1961இல் வெளிவந்திருக்கின்றது. தீ வெளிவந்தபோது அது
உருவாக்கிய உரையாடல்களும் சர்ச்சைகளும் அன்றையகாலத்தில் வெகு பிரபல்யம் பெற்றவை. " 'தீ'யைத் தீயிலிட்டுக்...
எஸ்.பொ (என்கின்ற எஸ்.பொன்னுத்துரை)
In எஸ்.பொ, In வாசிப்புSaturday, February 26, 2022
(தொடர்)பகுதி-01
ஆசான்களைப் பற்றி எழுதும்போது எங்கிருந்தோ ஒரு
நெகிழ்ச்சி வந்துவிடுகின்றது. அதேவேளை அந்த நெகிழ்ச்சி, ஆசானாகியபோதும் தேவையற்று ஒருவரை விதந்தோத்திவிடக்கூடாது
என்கின்ற மெல்லிய பதற்றத்தையும் கூடவே கொண்டுவருகின்றது. இவ்வாறுதான் ஒவ்வொரு
பொழுதும் எழுத்து சார்ந்து என் ஆசான்களாகிய ஒருவரான எஸ்.பொவை வாசிக்கும்போதோ, நினைக்கும்போதோ எனக்குள் பல்வேறு உணர்வுகள்
வந்துவிடுகின்றன....
உதிராக் கடைசி இலை!
In அனுபவம், In இன்னபிறThursday, February 24, 2022
1.இலையுதிர்காலத்தில் முதல் இலை மஞ்சளாவதை யன்னலுக்குள்ளால் பார்த்துக்கொண்டிருந்தேன். கனடா வந்த புதிதில் ESL (English as a Second Language) வகுப்பில் சேர்ந்தபோது, படித்த ஓ'ஹென்றியின் 'கடைசி இலை' கதை நினைவுக்கு வந்தது. கதையில் ஒரு பெண்ணுக்கு நிமோனியா வந்து மோசமான நிலையில் இருப்பார். அவர் தனது அறையிலிருந்து வெளியே இலைகள் உதிர்த்துக்கொண்டிருக்கும் மரத்தைப்...
The Hand of God
In திரைமொழிWednesday, February 23, 2022
பால்யத்தைப் பற்றிச்
சொல்ல நம்மிடம் நிறையக் கதைகள் இருக்கின்றன. ஏனெனில் அப்பாவித்தனத்திலிருந்து நாம்
மெல்ல மெல்ல விலகிச் செல்கின்ற பருவமது. புதிய விடயங்கள் அறிமுகமாகின்றபோது
தடுமாறுகின்ற காலங்களும் அதுவாகவே இருக்கும். ஆனால் அதை அக்காலத்திற்குரிய
குறும்புகளோடும், கசப்புக்களோடும், குதூகலத்தோடும், இழப்புக்களுடனும்
சொல்ல முடியுமா என்பதுதான் நம் முன்னாலிருக்கும்...
காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 02
In இன்னபிற, In வாசிப்பு, In ஜெயமோகன்Tuesday, February 22, 2022
எழுத்தாளர்களை
சிலவேளைகளில் இரண்டு வகையினராகப் பிரித்துப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஒருவகையினர்
தமதில்லாத பிற கதைகளை எழுதியவர்கள், மற்றவகையினர் தாம் சம்பந்தப்பட்டக் கதைகளை எழுதியவர்கள். தமது வாழ்க்கைக் கதைகளை
எழுதியவர்கள் என்று நினைப்பவரும் தமது கதைகளை அப்படியே சொல்லிருப்பார்கள் என நம்பத்தேவையில்லை.
புனைவு என்பது நடந்தவையிலிருந்தும்/நடக்காதவைகளிலிருந்தும்...
காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 01
In இன்னபிற, In வாசிப்புMonday, February 21, 2022
சில வாரங்களுக்கு முன்னர் நண்பர்கள் இருவருடன் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தபோது, பயணிப்பவர்களால்தான் நிறைய எழுதமுடியுமென ஒரு நண்பர் சொன்னார். அத்துடன் தமிழில் இன்று ஒரளவு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களையும் உதாரணங்களாய்க் காட்டினார். அவர் சொல்வதில் ஒருவகையில் நியாயம் இருக்கிறதென்றாலும், அதை ஒரு நிபந்தனையாக முன்வைக்க முடியாதெனச் சொன்னேன். தமிழில் எனக்குப் பிடித்த அசோகமித்திரனோ, நகுலனோ அவ்வளவாகப் பயணித்ததில்லை....
Subscribe to:
Posts (Atom)