கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு..

Friday, June 30, 2023

 ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். விடிகாலை 6 மணிக்கு பேருந்தில் புதிய நகர் வந்துவிட்டேன். தங்கவேண்டிய அறைக்கோ 11மணிக்குப் பிறகுதான் அனுமதி. நீண்ட நெடும் பயணம் தந்த கசகசப்பில் அலுப்புடன் காலையில் தேநீர்க்கடை தேடிப் புறப்பட்டேன். சில தெருவோரக் கடைகள் இருந்தாலும், கழிப்பறை இருக்கும் கஃபே என் தெரிவாக இருந்தது. நான் அந்தக் கஃபேயிற்குப்...

வரலாற்றில் வாழ்தல்

Friday, June 30, 2023

எஸ்.பொ(ன்னுத்துரை) ஒரு சுவாரசியமான மனிதர். தானொரு ‘காட்டான்’ என்று வாழ்நாளுக்கான இயல்விருது கனடாவில் கொடுக்கப்பட்டபோது பொதுவெளியில் தயங்காமல் பிரகடனப்படுத்தியவர். அவரின் ‘வரலாற்றின் வாழ்தல்’ உண்மைகளை இயன்றளவு அப்படியே முன்வைக்கின்ற ஒரு சுயசரிதை நூல். ‘வரலாற்றில் வாழ்தல் ஆயிரம் பக்கங்களுக்கு மேலா? அதுவும் இரண்டு பகுதிகளா? 3000 இற்கு மேற்பட்ட பக்கங்களை வாசிப்பதா...

குமரகம்

Thursday, June 29, 2023

 மாலையில் அந்த ஒழுங்கைகளில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கம் படகுகள் மிதக்கும் ஆறு. இன்னொரு பக்கம் சிறு சிறு ஓடைகள். இரண்டையும் டார்த்தீனியம் மூட முயற்சித்தாலும் நீர் அதைத் தாண்டி முன்னே சென்று கொண்டிருந்தது. சூரியன் மறைந்த பொழுதுகளில் வீடுகளில் எல்லாம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒழுங்கையில் இருந்தே இவற்றைப் பார்க்க ஊர் கார்த்திகைத் தீபநாட்கள் ஞாபகம்...

கார்காலக் குறிப்புகள் - 07

Wednesday, June 28, 2023

 நண்பரொருவர் சில நாள்களின் முன் சந்திப்பதற்காக அழைத்திருந்தார். நாங்கள் தேநீர் அருந்தியபடி எங்கேனும் கஃபேயில் இருந்து உரையாடுவோம் என்றபோதும், அவரது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று என்னை அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது துணைவியாரும் சுவாரசியமானவர். எங்கள் உரையாடல் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றியதாக இருந்தது. நண்பர் இப்போது ஒரு முழுநீள சிங்களப் படத்தை எடுத்து முடித்திருந்தார். அதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு...

கொச்சின்

Tuesday, June 27, 2023

 காலையில் பெஞ்சில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். மனிதர்கள் கடந்துபோகையில் அவர்களின் விழிகளைப் பார்ப்பதைப் பொதுவாகத் தவிர்ப்பேன். ஏனோ இவரின் விழிகளைப் பார்த்து ஒரு சின்ன தலையசைப்பை இருவரும் செய்தோம். மூக்குத்தி அணிந்த பெண்கள் எப்போதும் வசீகரிப்பதைப் போல, இவரின் கடுக்கனும், நீண்ட தாடியும் என்னைக் கவர்ந்திருக்கலாம். இவ்வாறு...

கார்காலக் குறிப்புகள் - 06

Friday, June 23, 2023

 பொன்னியின் செல்வன் (02) முதல்நாளே பார்க்கப் போனதற்குக் காரணம் அக்காவும், மருமகளும். அக்கா பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்ததையிட்டு அண்மையிலும் இன்னொருமுறை முழுதாக  ஐந்து பாகங்களையும் வாசித்தார். பொன்னியின் செல்வனை ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு அவருக்கு நிறைய அறிவுண்டு. அதுமட்டுமின்றி ஜெயமோகனின் வெண்முரசையும் அது வெளிவந்தகாலத்தில் தினம் தினம் வாசித்து...

புதுச்சேரி (பாண்டிச்சேரி)

Thursday, June 22, 2023

 புதுச்சேரி என்றழைக்கப்படும் பாண்டிச்சேரிக்கு போவது என்பது நீண்டநாள் கனவாக இருந்திருக்கிறது. கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், ராஜ் கெளதமன் ( லண்டனில் சிலுவைராஜ்) போன்றோரின் படைப்புக்களை வாசிக்க அந்த ஆர்வம் இன்னும் கூடியிருந்தது. ஒருவகையில் இவர்கள் காட்டிய ஊர்களும், தெருக்களும், மனிதர்களும் வழியாக நான் மானசீகமாய் அங்கே நான் நடமாடிக் கொண்டிருந்திருக்கின்றேன். சென்னையில்...

கார்காலக் குறிப்புகள் - 05

Tuesday, June 20, 2023

2000களின் தொடக்கத்தில் இருந்த forum களில் எழுதி விவாதித்து வந்த தலைமுறைகளில் ஒருவன். அப்போது திண்ணை, பதிவுகள் இந்தப் ‘பொதுமன்றங்களை’ வைத்திருந்தன. நான் பங்கேற்காத ‘யாழ்’ போன்ற வேறு பல பொதுமன்றங்களும் அன்றைய காலங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்தன. பின்னர் வலைப்பதிவுகள் நமக்கு அறிமுகமாக, நமக்கென்றோர் சொந்தக் குடிலை அமைத்து எந்தத் தணிக்கையுமின்றி எழுதத் தொடங்கினோம்....

கண்டிய அரச வரலாறும், பிரசன்ன விதானகேயின் Gaadi திரைப்படமும்

Monday, June 19, 2023

 கண்டியில் தலதா மாளிகைக்குள் போனபோது அங்கே கண்டிய மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அத்தோடு சிங்களவர்கள் புத்தரின் பல்லென நம்பும் ‘புனிதப்பல்’ பற்றிய தகவல்களும், தலதா மாளிகையின் கடந்தகால வரலாறும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. கண்டியே இலங்கையில் இறுதிவரை ஆங்கிலேயருக்கு எதிராக நிமிர்ந்து நின்ற இராச்சியம் என்கின்றபோதும், கண்டிய அரச வரலாறு...