கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மலரவனின் ‘போர் உலா’

Sunday, March 30, 2025

  1.   'போர் உலா' 1990களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்.  ஆங்கிலத்தில் இது 'War Journey' என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.  1990ம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின்...

கார்காலக் குறிப்புகள் - 83

Friday, March 28, 2025

 சங்கரி சந்திரனின் ' சூரியக் கடவுளின் பாடலை' (Song of the Sun God) நேற்று முழுதுமாக இருந்து வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட 400 பக்கங்கள் இருக்கும். ஏற்கனவே சிலமுறை வாசிக்கத் தொடங்கி கொஞ்சப் பக்கங்களிலேயே நிறுத்திவிட்டிருந்தேன். தொடர்ச்சியாக ஒரே பின்னணியில் கதைகளை வாசிப்பது ஒருபுறம் அலுப்படைய வைக்கின்றதென்றால், இன்னொருபுறம் போரின் பின்னணியில் சொல்லப்படும்...

மெக்ஸிக்கோ (இளங்கோ) - இராமசாமி செல்வராஜ்

Sunday, March 23, 2025

  நண்பர் டிசே தமிழனின் (இளங்கோ) மெக்சிக்கோ நாவலை நூலகங்களின் வழியே கடன்வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நூல். அவருடைய எழுத்தும் நடையும் வலைப்பதிவுகளின் வழியே அறிந்த ஒன்றுதான் என்றாலும், முழுநூலாய்ப் படிப்பது இதுவே முதன்முறை. சிக்கலான கதைக்களம். அதனால் நடையும் சொற்பாவனைகளும் சற்று அந்நியமாய் உணரச் செய்தது. தொராண்டொ, மெக்சிக்கோ, அமெரிக்கா...

இசை அழைத்துச் செல்லும் பாதைகள் குறித்து க.நவம்

Thursday, March 20, 2025

காலம் 61&62 ஆவது இதழில் ‘இசை அழைத்துச் செல்லும் பாதைகள்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் காலம் இதழ் வெளியீட்டு விழா கனடாவில் நடந்தபோது க.நவம் அவர்கள் அது குறித்துப் பேசிய காணொளி:நன்றி: தடயத்தார்/ 'காலம்' செல்வம்/க.நவம...

கார்காலக் குறிப்புகள் - 82

Thursday, March 20, 2025

 பால்கியின் இந்தநேர்காணலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் சிம்பொனியை மட்டுமில்லை, ஓர் இரசிகர் எப்படி ஒரு மேதையைக் கொண்டாட முடியும் என்பதற்கும் நல்லதொரு உதாரணமாக இதைச் சொல்லலாம். எவ்வளவு அழகாக இளையராஜா தனக்கு இசையினூடு தந்து கொண்டிருப்பவற்றை மட்டுமின்றி, இசையில் இருந்து வெளியே வரும்போது அவ்வப்போது பிறர் குற்றஞ்சாட்டும் அவரின் 'Arrogance' ஐ எப்படி நாம்...

கடிதங்கள் - 05

Tuesday, March 18, 2025

   அன்பு இளங்கோ,  இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், மிகக் கவனமாகவும், மிதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது இளங்கோ. அப்படி எழுதப்பட்டிருந்தாலும், இது சொல்லும் வரலாறு திடுக்கிடலையும், துக்கத்தையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு வன்முறையான வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆள், எந்த மிகை உணர்வுக்கும் ஆளாகாமல், அல்லது அவற்றிலிருந்து தள்ளி நின்று கொண்டு, உண்மைச் சம்பவங்களை திரும்பிப் பார்த்து, அதை இப்படி...

கார்காலக் குறிப்புகள் - 81

Monday, March 17, 2025

 காலம்' இதழில் மு.பொன்னம்பலம் (மு.பொ) குறித்து என்.கே.மகாலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சூழவிருந்த தீவுகளிலிருந்து மக்கள், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் வெளியேறத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் நெடுந்தீவு,புங்குடுதீவு, நயினாதீவு போன்ற பல தீவுகளில் வயதானவர்களும், நோயுற்றவர்களும் மட்டுமே எஞ்சி நின்றார்கள்....