கலைஞர்களாக இருப்பது...
***
பாடகர் Ed Shreen ஐ அறியாதவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள். அவருடைய Thinking Out Loud, Shape of You போன்ற பல பாடல்களுக்கு நான் தீவிர இரசிகனும் கூட. ஆனால் இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.

அவர்
தனது இசை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாய் பல்வேறு நாடுகளில் நடத்திக்
கொண்டிருக்கின்றார். அதில் பல கலைஞர்கள் அவருடன் இணைந்து பாடிக்
கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு பாடகர்/ராப்பரான
Macklemore, வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவைத்
தெரிவித்திருக்கின்றார்.
இப்படி
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தால் இஸ்ரேலிய ஆதரவு பெரு முதலாளிகள் என்ன
செய்வார்கள். எட்டிடம் தொடர்ந்து Macklemore நிகழ்ச்சியில் சேர்த்தால்
பிரமாண்ட அரங்குகளில் நிகழ்வுகளை நடத்த இடம் தரமாட்டோம் என்று
மிரட்டியிருக்கின்றனர்.
நமது பையன் எட் பயந்துபோய் Macklemore ஐ தனது நிகழ்வுகளில் இருந்து அகற்றியிருக்கின்றான்.
அதன் பிறகு நடந்ததுதான் நம் தமிழ்ச்சூழலில் இருக்கும் எழுத்தாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.
*
எட்டின் நிகழ்வில் Macklemore போல வெவ்வேறு Actகளில் பங்குபற்றிய இசைஞர்கள் இப்போது Macklemore இற்கும் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்து இந்த இசை நிகழ்வுகளிலிருந்து முற்றாக வெளியேறியிருக்கின்றனர்.
அதைத்தான் அசலான கலைஞர்கள் செய்வார்கள் அல்லவா?
இவர்கள் எட்டின் நண்பர்களாகவும், எட்டின் மூலமாகவே இவர்களின் இசைப்பாதை செழுமையானது என்கின்றபோதும் இவர்கள் பிரபல்யமா, அறமா என்ற கேள்வி வந்தபோது, அறத்தின் பாதையைத் தெளிவாகத் தெரிந்தெடுத்திருக்கின்றனர்.
அதிலும் ஐரிஷ் பின்னணியில் வந்த Rowe and Beoga கலைஞர்கள் விடுத்த அறிக்கையில்...
"நாங்கள் காலனித்துவத்தைப் புரிந்துகொண்ட ஐரிஷ் மக்கள். பாலஸ்தீனத்திற்கான ஐரிஷ் கலைஞர்கள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களான நாங்கள் நீதியின் பொருட்டு அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர்களும் கூட, அவ்வாறே மேலும் தொடர்ந்து இருப்போம்.' என்று சொல்லியிருக்கின்றார்கள்.
அதிலும், எட் ஷீரனைத் தனது நண்பர் என்று குறிப்பிட்ட ரோவ், எட்டே தனது வாழ்க்கையையே மாற்றியவர் என்று கூறினாலும்,.
"ஆனால் ஐரிஷ் மக்களாகிய எங்களுக்கு இனப்படுகொலை, கட்டாயப் பஞ்சம், வன்முறையான ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றி மிக நன்றாகவே தெரியும். மேலும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நியாயமான குரல்களை எழுப்புபவர்களை மௌனமாக்க பில்லியனர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்திருக்கின்றார் என்பதுதான் நாம் அவதானிக்க வேண்டியது.
இன்னொரு கலைஞரான லூக்கஸ் கிரஹம் ( Lukas Graham):
“நீங்கள் பெரும்பணத்தை வைத்திருப்பதால், ஒரு உரையாடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தந்துவிடாது. யார் பேச வேண்டும் அல்லது எந்தத் துயரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை ஒருவரின் வங்கிக் கணக்கு இருப்பு ஒருபோதும் தீர்மானிக்கக் கூடாது” என்று நேரடியாகவே பெரும் முதலாளிகள் எந்த அரசியலை நாம் பேசவேண்டும் என்று சொல்வதற்கு எதிராகப் பேசியிருக்கின்றார்.
"Artists must not be silenced when they speak up for the oppressed" என்று அதில் விலகிய இன்னொரு கலைஞரான Finneasவும் கூறியிருக்கிறார்.
நம்பிக்கை தருகின்ற புதுத்தலைமுறைகள்..!
***
(உதவிய தளங்கள், CBC and CityTV News)

0 comments:
Post a Comment