கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிகோ வாசிப்பனுபவம் - இளவரசி இளங்கோவன்

Saturday, October 31, 2026

 

தலைப்பு: மெக்ஸிகோ

எழுத்தாளர்: இளங்கோ (Elanko DSe)

பதிப்பகம்:டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள்:172

சிறப்பு:2019 “பிரபஞ்சன் நினைவுப் பரிசு “ பெற்ற நாவல்


ஒரு வருடத்திற்கு மேலேயே இருக்கும்.இளங்கோ மொன்றியல் வந்தபோது சந்திக்கலாம் என்று பேசியபோது அவரே 2 புத்தகங்களோடு நேரில் வீட்டிற்கு வந்தார் தோழமையோடு.

 

இனிமையான பொழுது அது. எனது மகனோடு அமர்ந்து சதுரங்கம் விளையாடியதால் அவனுக்கும் மறக்க முடியாத நபர் ஆகி போனார்.

 

 

ஒரு வருட காலமாக என் தலைக்கு அருகில் புத்தக அடுக்கில் ஒவ்வொரு நாளும் வாசிக்க வைத்து இருந்தாலும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்க முடியவில்லை.

 

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து பழகி போய் விட்டது. இடையிடையே வேறு வேறு புத்தகங்களையும் வாசித்து கொண்டே இருந்தேன்.

 

வாசிப்பனுபவம்:

 

சரி மெக்சிகோவிற்கு வருவோம்.காதலும் பகடியும்,சுய பரிசோதனையும் மன நுண்ணர்வுகளும் வெளிப்பட அவரது கற்பனை உலகத்தில் நம்மையும் அவரோடு சேர்த்து 31 அத்தியாயங்கள் கொண்டு சென்ற திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.

 

என்னவொரு காதல் ,இரசனை . ஆண்களுக்கே மட்டுமே இந்த சுதந்திரம் நினைத்தால் நினைத்தவுடன் பயணப்படவும், நினைத்ததை செய்யவும் ஆண்களால் மட்டுமே முடியும்.பெண்கள் பயணப்படுவது நத்தை கூட்டை முதுகில் சுமப்பது போல வீடு,பிள்ளைகள்,கவலைகள் சுமந்து திரிவது என்று எண்ணிக்கொண்டேன். 

 

ஆமாம் அவளின் பெயரை குறிப்பிடவே இல்லையே. தனி மனித சுதந்திரம் கருதி இருக்கும் என நினைத்து கொண்டேன்.

 

32 வது அத்தியாயத்திலிருந்து குழம்ப தொடங்கிவிட்டேன். என்ன சம்பந்தம் சம்ந்தமில்லாமல் போய் கொண்டிருக்கிறது என.என்னதான் ஆயிற்று என.

 

மனித மனம் ஒரு குரங்கு என சும்மாவா சொன்னார்கள். மனதை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் அது எப்படி zigzag போல பயணிக்கும் என.

 

மனதுக்குள் இருக்கும் குழந்தையை பற்றிய அத்தியாயம் அருமை. ஓவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தைமை இருக்கிறது.அது இறக்கும் போது ஒருவருக்குள் இருக்கும் மனித தன்மையும் இறந்து விடும்.அதற்கு பிறகு அவர்கள் இறுகிய இயந்திரங்கள் மட்டுமே.

 

வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மனைவிக்கு தேநீர் தயாரித்து தரும் ஒரு அத்தியாயம் எனக்கு தெரிந்து அனைத்து நவீன ஆண்களின் கற்பனையே.ஆனால் அழகானது சினிமாக்களிலும் குறும்படங்களிலும் பார்த்த காட்சிகளே.

 

40 வது அத்தியாயத்தில் மீண்டும் தடத்திற்கு வரும் இரயில் போல கதை போக்குக்கு வருகிறது.என்னதான் ஆயிற்று என்ற ஆவல் அவசரமாக வாசிக்க வைக்கிறது அத்தியாயங்களை.

 

இறுதியில் புத்தகத்தை படித்து முடித்த பின் மலையாள படத்தை பார்த்தது போல இருந்தது.

 

நிறைய உரையாடல்கள் மனதில் பதிந்தது.”கடவுள்கள் வெளியேறிவிட்ட ஆலயங்களில் கோரிக்கையை வைக்கும் பக்தர்கள் “ பற்றிய வசனங்கள்.

 

இல்லாத தம்பியை பற்றிய ஆழமான கனவுகள்.ஈழபோரில் இருந்து உள , உடல் காயத்தோடு வெளியேறிய ஒவ்வொரு ஈழத்தமிழ் உறவுகளுக்கும் இந்த ஆழமான கனவு இருக்கிறது.

 

நேரில் பயணப்பட்டு பிரமிடு மற்றும் மாயன்மார்களை சந்திக்காமல் மெக்ஸிகோ வீதிகளில் அலையாமல் , ப்ரீடா இல்லத்திற்கு செல்லாமல் இதை எழுதியிருக்க கூடுமோ! இது உண்மையில் நடந்ததா இல்லை புனைவா இளங்கோவிடம் கேட்டு விட வேண்டும் என்ற உந்துதலே இந்நாவலின் வெற்றி.

 

வார்தைகளை வசப்படுத்தும் வல்லமை பெற்று இருக்கிறீர்.பகடிக்கும் பஞ்சமில்லை. சொல்ல போனால் ஈழத்து எழுத்தாளர்கள் அனைவருக்கும் பகடி இயல்பாக சரளமாக வருகிறது 

 

காலம் செல்வத்தார்,சோபா சக்தி ,அ.முத்துலிங்கம் போன்றோர் எழுத்துக்களிலும் பகடி எப்போதும் இழையோடுவதை உணர்ந்து இருக்கிறேன்.பல சமயங்களில் வாய் விட்டு சிரித்து இருக்கிறேன்.

 

வாழ்த்துகள் இளங்கோ 

 

மென்மேலும் எழுதுங்கள் 

 

நன்றி

 

இளவரசி இளங்கோவன் 

 

***

எழுத்தாளர் இளங்கோ பற்றி ..

 

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொன்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள் தவிர, ‘டிசே தமிழன்’ என்ற பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் எழுதி வருகிறார். இது இவரது நான்காவது நூல்.

 

இதுவரை வெளிவந்த தொகுப்புகள்:

நாடற்றவனின் குறிப்புகள் (2007)

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (2012)

பேயாய் உழலும் சிறுமனமே (2016)

இணையதளம்: www.djthamilan.blogspot.com

 

(நன்றி: இளவரசி இளங்கோவன்)

 


0 comments: