கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மட்டக்களப்பு – 04

Thursday, August 31, 2023

குறும்பட விழாவில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டிருந்தனர். அரசு சாரா அமைப்பான CARE இன் ஒரு பிரிவு இதை நடத்தியிருந்தது. ஒரு குறும்படம் நுண்கடன் குறித்தும், மற்ற இரண்டு குறும்படங்கள் இன நல்லிணக்கம் பற்றியும் பேசியிருந்தன. மூன்றில் ஒரு படம் பெண் நெறியாளரால் எடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு திரைப்படத்துக்கான கதை(?)யை கேஷாயினி எழுதியிருந்தார். குறும்படங்கள் திரையிட்டு...

மட்டக்களப்பு – 03

Wednesday, August 30, 2023

ஏறாவூர்ப் புத்தகக் கொண்டாட்டத்திற்காக, ஊறணியில் இருந்து பஸ் காலையில் எடுத்தாலும் வெயில் சுட்டெரித்தது. ஏறிய பஸ்சில் மருதமுனையில் இருந்து வந்த ஜமீலும் இருந்தார். வடகோவையார் அவரோடு பேச்சுக் கொடுக்க, நான் வாவியை யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுப் போனேன். ஏறாவூரில் இறங்கி ஒரு கடையில் தண்ணீர் வாங்கியபோது, அந்தக் கடைக்காரர் எங்கே போகின்றீர்கள் எனக் கேட்டார்....

கார்காலக் குறிப்புகள் - 20

Tuesday, August 29, 2023

 ஹொலிவூட் 1920களில் மெளனப் படங்களில் இருந்து, பேசும் படங்களுக்கு மாறுகின்ற காலகட்டதைப் நுட்பமாய்ப் பேசுகின்ற திரைப்படம். அந்தக் கதையை விளிம்புநிலை மனிதர்களின் பார்வையினூடு முன்வைக்கின்றது. ஒரு மெக்ஸிக்கன் குடியேறி ஹொலிவூட் என்னும் பிரமாண்டத்தில் பங்கு பெறுவதற்காக வருவதையும், அவன் அங்கே விளிம்புநிலை நடிகையாக இருக்கும் நியூ ஜேர்ஸியைச் சேர்ந்த பெண் மீது காதல்...

மட்டக்களப்பு – 02

Monday, August 28, 2023

 ஒரு நகரத்திற்குப் போனால் அதன் நூதனசாலைகளைத் தேடிப் போய்ப் பார்ப்பது என் வழமையாக இருக்கும். அதுபோல எங்கெங்கெல்லாம் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றதோ அவற்றையும் தவறவிடாது சென்று பார்ப்பேன். சில புத்தகக் கண்காட்சிகளை – அவை சிறிதோ பெரிதோ- புகைப்படங்களில் பார்த்து என் நினைவின் சேகரங்களைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி மீள மீள அசை போட்டபடியிருப்பேன். ஓரிடத்திற்கு...

மட்டக்களப்புப் பயணம் – 01

Sunday, August 27, 2023

மட்டக்களப்புக்குப் போவதற்கு, ஏறாவூரில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சி ஒரு காரணம். மற்றக்காரணம் அங்கே வடகோவை வரதராஜரின் புதிய நூலொன்று ‘கஸல்’ பதிப்பகம் ஊடாக வெளிவருவதாகவும் இருந்தது. என்னோடு வேறு சில நண்பர்களும் மட்டக்களப்புக்கு வருவதாக இருந்தாலும். கொழும்பிலும், பாசிக்குடாவிலும் எழுத்தாளர் ஒருவரால் நிகழ்ந்துவிட்ட சில அசம்பாவிதங்களால் தயக்கத்துடன் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்....

கார்காலக் குறிப்புகள் - 19

Saturday, August 26, 2023

 அண்மையில் சில புனைவுகளை வாசித்து முடித்திருந்தேன். எவையும் அவ்வளவு பெரிதாக ஈர்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் உழைப்புத் தேவை. எழுத்து சார்ந்தும் அது இருக்கிறது என்ற புரிதல் இருக்கிறது. எனவே இப்போது எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பின் அதை நேரடியாக முன்வைப்பதில்லை. அவ்வகை விமர்சனங்கள் தேவையில்லை என்பதால் அல்ல; அதைவிட எவ்வளவோ நல்ல படைப்புக்கள் கவனிக்காமல் இருக்கின்றன...

கார்காலக் குறிப்புகள் - 18

Tuesday, August 22, 2023

 Biopics ************* கடந்த சில நாட்களாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாம் Biopic ஆக இருந்தது தற்செயல்தான். சல்வடோர் டாலியின் 'Dali Land ', எல்விஸ் பிரிஸ்லியின் 'Elvis' ஆகிய திரைப்படங்களையும், ஆர்னால்ட் ஸ்வாஸ்நேக்கரின் 'The Schwarzenegger' அன்னா நிக்கோல் ஸ்மித்தின் 'Tragic Beauty: Anna Nicole Smith' போன்ற ஆவணப்படங்களையும் பார்த்திருந்தேன். அமெரிக்காவில்...

'தாய்லாந்து' - சரவணன் மாணிக்கவாசகம்

Tuesday, August 22, 2023

 'தாய்லாந்து' - இளங்கோ: ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். பதினாறு வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையும் எழுதி வருகிறார். இது இவரது ஏழாவது நூல். ஒரே நாட்டில் பிறந்தவர்கள், போரால் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, பின் இந்தியாவில் சந்தித்து, தாய்லாந்திற்கு...

கார்காலக் குறிப்புகள் - 17

Sunday, August 20, 2023

 சகீனாவின் முத்தம் ************ "தற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை. அவ்வளவுதான்." என்ற வரிகளோடு தொடங்குகின்றது 'சகீனாவின் முத்தம்' என்கின்ற இந்த நாவல். அதற்கேற்ப இந்நாவலில் தற்செயல் போல நிகழ்கின்ற பல சம்பவங்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கின்றன. பெருநகரத்தில் வசிக்கின்ற வெங்கட் என்கின்ற வெங்கட் ரமணனின்...