
அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுபோல இன்று
விடிகாலையில் துயில் எழும்பியதால் சூரிய உதயம் பார்க்கலாம் என்று எலியிட்ஸ்
கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானேன். ஓட்டோ ஓடிக்கொண்டு வந்த தமிழ்ச்செல்வி அக்கா, ‘ விடிகாலையிலே ஊபரில் என்னைய்யா கிரடிட் கார்ட்டைப் போட்டிருக்கிறாய் காசிற்கு மாற்று இல்லாவிட்டால்
சவாரியை நடுரோட்டில் நிறுத்திவிடுவேன்’ என்று வெருட்டினார். தமிழ் ஒரு...