தமிழ்ச்
சூழல் தங்களுக்குத் தாங்களே சூடிக்கொண்ட மலினமான கவியரசுகள்,
கவிப்பேரரசுகளின் பக்கமும், இன்னொருபுறம் ஏதென்று அறியாத கல்லூரிகள்
வழங்கும் 'டாக்டர்' பட்டங்களில் தமது எழுத்தாளுமையை புதைத்து பெருமிதம்
கொண்டு, விருதுக்கு எதிர் விருதென ego centric trip களில் தொலைந்து
போகின்ற காலத்தில், ஓர் எழுத்தாளர் இன்னமும் தன்னை எங்கேயும் முன்னிறுத்த
விரும்பாது, தான் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதையோ அல்லது தனது
புகைப்படங்களையோ பிரசுரிக்காது (ஒரு குறிப்பிட்ட காலம்வரை மிலான்
குந்தேராவும் அப்படி இருந்தவர்) 'தலைமறை'வாக எழுத மட்டும் செய்கின்றார்
என்பதை இந்த நவீன காலத்திலும் நம்ப முடிகின்றதா?
அவர்தான் Thomas Pynchon.
60களில்
இருந்து எழுதிவரும் தோமஸ், அவரது அறுபது வருட எழுத்து வாழ்க்கையில்
பத்துக்கு குறைவான நாவல்களே எழுதியிருக்கின்றார். கடந்த வருடம் அவரது
பத்தாவது நாவலான Shadow Ticket வந்திருந்தது.
தோமஸ் சிக்கலான, அபத்தமான நகைச்சுவையுடைய, அதேவேளை வரலாறு, கலை மற்றும் வெகுசன கலாசாரத்தையும் உள்ளக்கி எழுதும் ஓர் பின்நவீனத்துவ எழுத்தாளரெனக் கொண்டாடப்படுகின்றார்.
இந்தக் கூறுகளைக் கொண்ட அவரின் நாவல்களில் ஒன்றான, 'Vineland'ஐ தழுவி எடுக்கப்பட்ட படமே One Battle After Another.
இத்திரைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு அதில் இருக்கும் அன்றைய அமெரிக்க சமகாலமும் (60/70), அதேவேளை புரட்சி என்கின்ற பெருங்கனவு எவ்வளவு அபத்தமான நகைச்சுவையாக அமெரிக்க மண்ணில் ஆகின்றது என்பதை ஒருகாலத்தில் புரட்சியாளனாக இருந்த லியானார்டோ டீகாப்பிரியோ பாத்திரம், பிற்காலத்தில் குடிக்கும், போதைப்பொருளுக்கும் அடிமையான ஒரு paranoid தகப்பனாக மாறுவதைக் காண்கின்றோம்.
இதற்குள் அமெரிக்காவிற்குள் நுழையும் இலத்தீன் அமெரிக்க குடிவரவாளரை அனுதாபத்துடன் அணுகுதல், காப்பாற்றி தலைமறைவாக வைத்து அனுப்புதல், Black Panthers ஐ நினைவுபடுத்தும் கறுப்பினப்பெண்களின் புரட்சிக்கான தலைமைதாங்கல், காட்டிக்கொடுப்புகள், கொடூரமான அமெரிக்க இராணு (DEA/ICE) அமைப்புக்கள் என இன்றை சமகாலத்துக்கும் பொருந்துவதாக கதை இருக்கின்றது.
இதே தோமஸின் இன்னொரு நாவலான Inherent vice உம், அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றது. ஆக ஓர் எழுத்தாளர் தனது நாவல்கள் திரைப்படமாகும்போதோ, ஏன் சிறந்த திரைப்படத்துக்கென மிக உயரிய விருதைப் பெற்றபோதோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது ஓர் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு பெருமிதப்படக்கூடியது.
நாவல்களை பின்நவீனத்துவமாக எழுதுவது மட்டுமில்லாது, எழுத்தை மட்டும் பார்,, எழுதும் நான் யாரென்பது முக்கியமில்லை என்று அதே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் சொல்வதைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் தோமஸ் உண்மையிலே மதிப்புக்குரியவர்தான்.
***

0 comments:
Post a Comment