கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 141

Monday, March 23, 2026

 

இந்தத் தொடரை விளாடிமீர் (நபகோவ்) என்கின்ற பெயருக்காகவும், அதில் முதன்மைப் பாத்திரமாக நடித்த ராச்சல் வெல்ஸிற்காவும் பார்த்தேன். பல்கலைகழகச் சூழல்/MeToo/Open Marriage போன்ற பின்னணிச்சூழலில் இக்கதை நிகழ்ந்தாலும், தெளிவாக வரையறுக்க முடியாத ஒருவகை கலவையான உணர்வே (mixed feelings) இதைப் பார்த்து முடித்தபின் எனக்கு ஏற்பட்டது.

50 வயதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு பேராசிரியையே இதன் முதன்மைப் பாத்திரம். அவரே இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு போகின்றார். அவரது துணைவரும் ஆங்கிலத்துறையின் டீனாக இருக்கின்றவர். கதை நிகழும் காலத்தில் இந்த ஆண் பேராசிரியர் மீது கடந்தகாலத்தில் மாணவிகள் மீது ஏற்படுத்திக் கொண்ட பாலியல் உறவுகளால் பல்கலைக்கழகத்தால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார். அந்த விசாரணை தொடங்கி தீர்ப்புக்கள் வழங்கப்படும் காலத்தில் நடக்கின்ற கதைதான் இது.

 



பெண் பேராசிரியைக்கு இந்தப் பொழுதில் புதிதாக வருகின்ற ஒரு இளம் ஆண் பேராசிரியர் மீது பாலியல் சார்ந்து ஈர்ப்பு வருகின்றது. நீண்டகாலத்துக்கு, அவரின் வயது காரணமாக அடங்கியிருந்த பாலியல் வேட்கை மீள இந்தப் பெண்ணுக்கு ஏற்படுவதும், அதேவேளை அவரது துணை இப்படி மாணவிகளுடன் ஈடுபட்ட பாலியல் உறவுகள் பற்றி இந்தப் பெண் பேராசிரியை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்கின்ற பல்கலைக்கழகமட்ட விமர்சனங்களையும் கேட்டுக் கொண்டு இந்தப் பெண்ணின் நாட்கள் கழிகின்றன.

இது ஏற்கனவே வெளிவந்த நாவலான 'விளாடிமீர்' என்கின்ற நாவலை (2022) அடிப்படையாக முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. நபகோவ்வின் மீதிருந்த ஈர்ப்பினால் இந்த நாவலை ஜூலியா எழுதியதோடு அவரின் பெயரையும் இந்த நாவலுக்கு வைத்திருக்கின்றார். பலர் இந்த நாவல் நபகோவ்வின் 'லோலிடா' நாவலின் பாதிப்பு இருப்பதாகக் கூறியிருந்தாலும், நாவலாசிரியரான ஜூலியா இதற்கு 'லோலிடா' அல்ல, நபக்கோவின் மற்றொரு 'Laughter in the Dark' இதற்கு ஆதர்சம் என ஒரு நேர்காணலில் கூறுகின்றார். 

 

 
அந்த நாவலில் 'நாம் நமது வேட்கைகளால் எவ்வாறு சிறைப்பட்டிருக்கின்றோம்' என்பதையும், 'அதன் நிமித்தம் நாம் மனிதாபிமானத்தை இழந்து, யதார்த்தத்தை மறந்து, நமது வாழ்க்கையை நாம் சீரழித்துக் கொள்ளவும் செய்கின்றோம் என்பதை நபகோவ் பரிசீலிக்கின்றார்' என ஜூலியா கூறுகின்றார்.

அதேவேளை இன்று நபகோவ்வின் 'லோலிடா', 'எப்ஸ்டீனின் கோர்ப்புகள்' பொதுவெளிக்கு வந்தபின், பாலியல் குற்றவாளி இந்த நாவலையே தனது படுக்கையறையில் வைத்திருந்தவர் என்கின்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் இருப்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால், தனது நாயகியான ஹம்பேர்ட்டின் செயல்களுக்கு, யாரேனும் லோலிடாவை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டுவந்தால் அதைப் போல ஓர் அபத்தம் இல்லையெனவும் 'விளாடீமீரின்' நாவலாசிரியான ஜூலியா எச்சரிக்கின்றார்.

***


0 comments: